'தளபதி 63' படத்தில் இணைந்த பிரபல காமெடி நடிகர்

வெள்ளி, 16 நவம்பர் 2018 (22:43 IST)
விஜய் நடிக்கவுள்ள 63வது படமான 'தளபதி 63' படத்தின் அறிவிப்பு சமீபத்தில் அதிகாரபூர்வமாக வெளிவந்தது என்பது தெரிந்ததே.

இந்த படத்தை அட்லி இயக்கவுள்ளதாகவும், இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ளதாகவும், ஏஜிஎஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் இந்த படத்தின் நாயகி உள்பட நடிகர், நடிகைகள் இன்னும் யாரும் அறிவிக்கப்படவில்லை. இந்த நிலையில் கல்லூரி விழா ஒன்றில் கலந்து கொண்ட பிரபல காமெடி நடிகர் விவேக், 'தளபதி 63' படத்தில் தான் சத்தியமாக நடிக்கவிருப்பதாக தெரிவித்துள்ளார்.

கடந்த 2009ஆம் ஆண்டு வெளிவந்த 'வில்லு' படத்திற்கு பின்னர் விஜய்யுடன் மீண்டும் விவேக் இணையவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்