விஜய்காந்த் வீட்டில் டும் டும் டும் – சமூகவலைதளங்களில் பரவும் நிச்சயதார்த்த புகைப்படம் !

Webdunia
சனி, 7 டிசம்பர் 2019 (08:31 IST)
தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகரனுக்கு நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிரேமலதா தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள்.இளைய மகன் சண்முகபாண்டியன் சினிமாவில் கவனம் செலுத்த மூத்த மகன் விஜயபிரபாகரன் அரசியலில் ஆர்வம் காட்டி வருகிறார். அவருக்குத் திருமணம் எப்போது என கேள்வி எழுந்தபோது விரைவில் நடக்கும் என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.

இந்நிலையில் இப்போது அவருக்குக் கோவையைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரின் மகளோடு திருமணம் நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது. இது சம்மந்தமானப் புகைப்படம் சமூகவலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. நீண்ட நாட்களுக்குப் பிறகு விஜயகாந்த் வீட்டில் சுபகாரியம் நடப்பதால் தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்