திருமண வீட்டில் துப்பாக்கி சூடு: மூவர் படுகாயம்

திங்கள், 2 டிசம்பர் 2019 (08:44 IST)
வட இந்திய திருமண விழாவின்போது துப்பாக்கி குண்டுகளால் மேல் நோக்கி சுடப்படுவது ஒரு வழக்கமாக இருந்து வருகிறது. ஆனால் இந்த வழக்கத்தால் ஒரு சில நேரங்களில் குறி தவறி திருமண விழாவுக்கு வந்திருந்த விருந்தினர்கள் மீது துப்பாக்கி குண்டு பட்டு, படுகாயம் மற்றும் உயிரிழப்புகள் ஏற்பட்டு உள்ளது. இதனை அடுத்து திருமணங்களில் துப்பாக்கிசூடு பழக்கத்தை கைவிட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் பலர் தெரிவித்து வருகின்றனர் 
 
இந்த நிலையில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு திருமண விழாவின்போது ஆடல் பாடல் நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்த போது வழக்கமான துப்பாக்கி சூடும் நிகழ்வு நடைபெற்றது.  அப்போது குண்டு குறி தவறி மேடையில் டான்ஸ் ஆடிக் கொண்டிருந்த ஒரு நடனப் பெண்ணின் மீது குண்டு பட்டதால் அவர் படுகாயம் அடைந்தார் 
 
இதேபோல் மணமகனின் நெருங்கிய உறவினர் இருவர் மீதும் குண்டு பார்த்தது. இதனையடுத்து படுகாயமடைந்த மூவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து துப்பாக்கியால் சுட்ட விழாக் குழுவினரின் ஒருவரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். தவறுதலாக இந்த குண்டு பட்டதா அல்லது வேண்டுமென்றே அவர் துப்பாக்கியால் சுட்டாரா? என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்