கூடிய விரைவில் டாக்டர் படத்தைப் பார்க்கும் விஜய்!

Webdunia
திங்கள், 8 பிப்ரவரி 2021 (15:45 IST)
நடிகர் விஜய் தன் அடுத்த படத்தை இயக்கும் நெல்சனின் டாக்டர் படத்தை விரைவில் பார்க்க உள்ளாராம்.

இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் பிரியங்கா மோகனன்  நடித்துள்ள ’டாக்டர்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் கடந்த மாதம் முடிந்தது. இந்த படத்தின் ரிலீஸ் மார்ச் மாதம் 26 ஆம் தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் ரிலிஸூக்குப் பின்னரே நெல்சன் விஜய் படத்தின் படப்பிடிப்பை தொடங்குவார் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இப்போது டாக்டர் திரைப்படம் தயாராகிக் கொண்டு இருக்கும் நிலையில் விரைவில் அந்த படத்தை தனியாகப் பார்க்க உள்ளாராம் விஜய். இதற்கான ஏற்பாடுகளை நெல்சனும் சிவகார்த்திகேயனும் செய்து வருகிறார்களாம்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்