அடுத்த 3 மாதங்களில் பத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளியாகவுள்ளன.
பண்டிகைக் காலங்களில் வெளியாகும் பெரிய மாஸ் நடிகர்களின் படங்கள் சாதாரண நாட்களில் வெளியாகும் படங்களை விட வசூலில் முன்னிலையில் இருக்கும். மிகப்பெரிய வெற்றி பெற்ற கமர்ஷியல் படங்கள் பெரும்பாலும் பண்டிகை நாட்களிலேயே வெளியாகி இருக்கும்.
இந்நிலையில் பொங்கலுக்கு மாஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றதால் அடுத்தடுத்த பண்டிகை நாட்களுக்கு படங்கள் வரிசைக்கட்டி உள்ளன. ஆம், அடுத்த 3 மாதங்களில் பத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளியாகவுள்ளன.