விஜய் - சூர்யா சந்திப்பு

Webdunia
புதன், 10 நவம்பர் 2021 (15:08 IST)
நடிகர் விஜய் மற்றும் சூர்யா இருவரும் நீண்ட நாட்களுக்குப் பிறகு சந்தித்துள்ளனர்.

நடிகர் விஜய் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகிவரும் படம் பீஸ்ட். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார்.

இப்படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் தற்போது நடந்து வரும் நிலையில், இப்படத்திற்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிகிறது.

அதேபோல் நடிகர் சூர்யா நடிப்பில், பாண்டியராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் படம் எதற்கும் துணிந்தவன். இப்படத்திற்கு  டி . இமான் இசையமைக்கிறார். இப்படத்தையும் சன்பிக்சர்ஸ் தயாரிக்கிறது.

இந்நிலையில் நேற்று இவ்விரு படங்களின் படப்பிடிப்பு பெருங்குடியில் உள்ள சன்பிக்சர்ஸ் ஸ்டுடியோவில் நடந்தது. அப்போது நடிகர் விஜய் மற்றும் சூர்யா இருவரும் சந்தித்துப் பேசினர். ஆனால் புகைப்படம் எடுக்கப்படவில்லை.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்