புதுமுக இயக்குனருக்கு ஓகே சொன்ன விஜய் சேதுபதி... ஹீரோயின் இவர்தான்!

Webdunia
வியாழன், 28 மார்ச் 2019 (16:27 IST)
புதுமுக இயக்குனர் விருமாண்டி இயக்கத்தில் நடிக்க விஜய் சேதுபதி ஒப்புக்கொண்டிருக்கிறார். 
 

 
தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்திருக்கும் சூப்பர் டீலக்ஸ் படம் நாளை வெளியாகிறது. இந்தப் படத்தை அடுத்து சிந்துபாத், துக்ளக் என பல படங்களில் விஜய் சேதுபதி பிஸியாக இருக்கிறார். மேலும், விக்ராந்த் - விஷ்ணு விஷால் நடிக்கும் ஸ்போர்ட்ஸ் பேக்ரவுண்டில் உருவாகும் படத்துக்கு திரைக்கதை வசனத்தையும் விஜய் சேதுபதி எழுதி வருகிறார். 
 
இந்த பிஸி ஷெட்யூலுக்கு இடையில் ஐரா பட இயக்குநர் சர்ஜூன் மற்றும் நான் அவனில்லை, நாம் ஆகிய படங்களை இயக்கிய செல்வா ஆகியோரிடம் இணை இயக்குனராக பணிபுரிந்த விருமாண்டி சொன்ன கதை வி.சேவுக்கு பிடித்துவிடவே, அதில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். இந்தப் படத்தை `ஐரா' படத்தைத் தயாரித்திருக்கும் கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. இதில், ஹீரோயினாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க இருப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. ரம்மி, பண்ணையாரும் பத்மினியும் மற்றும் தர்மதுரை ஆகிய படங்களுக்குப் பின்னர் விஜய் சேதுபதி - ஐஸ்வர்யா ராஜேஷ் கூட்டணி இந்தப் படத்துக்காக மீண்டும் இணைகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்