மக்களவைத் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்திருக்கும் நிலையில், திடீரென அ.ம.மு.க துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனைச் சந்தித்து அவரது கட்சியில் இணைந்திருக்கிறார் டான்ஸ் மாஸ்டர் கலா. இது சினிமா வட்டாரத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.
அரசியலில் களமிறங்கக் காரணம் குறித்து பேசுகையில், தினசரி நிகழ்வுகளின் மீதான ஆர்வமும் ஜோசியத்தில் சொல்லப்பட்டதும்தான் என்கிறார் கலா மாஸ்டர். இதைப்பற்றி கடந்த 6 மாதங்களாக நன்கு யோசித்தே முடிவு செய்ததாகவும், தனக்குக் கடவுள் பக்தி ஜாஸ்தி என்றும் அவர் சொல்லியிருக்கிறார்.
தினகரனின் எளிமையும் தைரியமும் தனக்குப் பிடித்ததாகக் கூறியுள்ள கலா, கமலுடனான ரிலேஷன்ஷிப்பை இழக்க விரும்பாததால், மக்கள் நீதிமய்யத்தில் இணையவில்லை என்கிறார். தமிழகத்தின் மீதுதான் எனக்கு ஈர்ப்பு என்று சொல்லும் கலா, தலைமை தனக்கு எந்த ஏரியாவைக் கொடுத்தாலும் கலக்கத் தயார் என்கிறார்.