மறைந்த இயக்குநரின் மருத்துவச்செலவை ஏற்ற விஜய்சேதுபதி

Webdunia
செவ்வாய், 16 மார்ச் 2021 (21:31 IST)
இயக்குனர் ஜனநாதன் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது,  அவரின் மருத்துவ செலவு முழுவதையும் விஜய் சேதுபதி ஏற்றுக்கொண்டுள்ளாராம்.

இயற்கை, ஈ, பேராண்மை, புறம்போக்கு போன்ற படங்களை இயக்கியவர் எஸ்.பி. ஜனநாதன். இடதுசாரி சிந்தனைக் கொண்டவராக அறியப்படும் இவருக்கு சினிமா உலகில் மிகப்பெரிய மரியாதை உண்டு. தற்போது அவர் இயக்கிவரும் லாபம் படத்தின் டப்பிங் பணிகளில் ஈடுபட்டு வந்த அவர் வீட்டில் மயக்கமுற்ற நிலையில் கிடந்துள்ளார். இதையடுத்து அவரை மீட்ட உதவி இயக்குனர்கள் சென்னையிலுள்ள அப்பல்லோ மருத்துவமனையில்

உள்ள தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி கடந்த ஞாயிற்றுக்கிழமை அவர் இறந்தார்.
அவரது உடலுக்கு சினிமாத்துறையினர் அஞ்சலி செலுத்தினர். மயிலாப்பூரில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.

இந்நிலையில், ஜனநாதன் மருத்துவமனையில் சேர்கப்பட்டது முதல் அவருக்கான செலவு அனைத்தையும் நடிகர் விஜய் சேதுபதி செலுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.விஜய் சேதுபதியை பலரும் பராட்டிவருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்