ரஜினிக்கு எதிரான கருத்தை தெரிவித்த விஜய்சேதுபதி!

Webdunia
ஞாயிறு, 11 ஆகஸ்ட் 2019 (20:21 IST)
இன்று நடைபெற்ற துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு அவர்கள் எழுதிய புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், 'காஷ்மீர் விவகாரத்தை அமித்ஷா அவர்கள் மிக அருமையாக கையாண்டார் என்றும் அவருக்கு தனது வாழ்த்துக்கள் என்றும், காஷ்மீர் விவகாரத்தை அவர் கையாண்ட விதத்தை வைத்து அவர் யார் என்பது எல்லோருக்கும் புரிந்திருக்கும் என்றும் கூறினார். மேலும் மோடி - அமித்ஷாவை மகாபாரதத்தில் உள்ள கிருஷ்ணர் - அர்ஜுனனுக்கு இணையாக ஒப்பிட்டும் அவர் தனது பேச்சில் தருவித்தார் 
 
ரஜினியின் இந்த பேச்சிற்கு அரசியல் தலைவர்கள் பல்வேறு கருத்துகளை தெரிவித்து வரும் நிலையில் நடிகர் விஜய் சேதுபதி இதே காஷ்மீர் விவகாரம் குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார். காஷ்மீர் விவகாரம் ஜனநாயகத்திற்கு எதிரானது என்றும், அந்த மாநில மக்களுடைய பிரச்சினையை அவர்கள் தான் முடிவு எடுக்க வேண்டும் என்று பெரியார் அன்றே சொல்லி விட்டார் என்றும்,  காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசின் நடவடிக்கை குறித்து தனது விமர்சனத்தை முன்வைத்துள்ளார்
 
காஷ்மீர் விவகாரம் குறித்து மத்திய அரசு எடுத்த நடவடிக்கை சரியானது என்று ரஜினிகாந்த் கூறிய அதே நாளில் இந்த விவகாரத்தில் மத்திய அரசு செய்தது ஜனநாயகத்துக்கு எதிரானது என்று விஜய்சேதுபதி ரஜினிக்கு எதிரான கருத்தை கூறி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்