இதன் அடுத்தபாகமான 'வார் 2' படத்தில் ஹ்ருத்திக் ரோஷனுடன் இணைந்து நடித்துள்ளார் ஜூனியர் என் டி ஆர். இந்த படத்தை பாலிவுட்டின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான யாஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரிக்க, அயன் முகர்ஜி இயக்கியுள்ளார். கியாரா அத்வானி கதாநாயகியாக நடித்துள்ளார். படம் ஆகஸ்ட் 14 ஆம் தேதி ரிலீஸாகிறது.
இந்த படத்தில் ஜூனியர் என் டி ஆர் நடித்துள்ளதால் தென்னிந்திய சினிமாவில் படத்துக்கு நல்ல வரவேற்பு உள்ளது. ஆனால் இந்த படத்தில் என் டி ஆர் குறைவான நேரமே வருவார் என்று ஒரு தகவல் தெலுங்கு ரசிகர்களிடையே பரவியது. ஆனால் இதைப் படக்குழு மறுத்துள்ளது. படத்தில் 35 நிமிடக் காட்சிகள் தவிர அனைத்து நேரமும் அவர் திரையில் இருப்பார் என தெரிவித்துள்ளது.