அஜித் 64: திரைவாழ்வைத் தொடங்கிய நாளில் அடுத்த பட அப்டேட்.!

vinoth

வியாழன், 3 ஜூலை 2025 (11:03 IST)
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் அஜித். அவர் நடிப்பில் கடைசியாக வெளியான ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்று வசூலை வாரிக் குவித்துள்ளது. 250 கோடி ரூபாய்க்கு மேல் திரையரங்கம் மூலமாக வசூல் ஈட்டியுள்ளதாக சொல்லப்படுகிறது.

இதையடுத்து கார் ரேஸ் பந்தயங்களில் ஆர்வமாக இருக்கும் அஜித், நவம்பர் மாதத்தில் தன்னுடைய அடுத்த பட ஷூட்டிங்கைத் தொடங்குவார் என சொல்லப்படுகிறது. அந்த படத்தையும் ஆதிக் ரவிச்சந்திரனே இயக்கவுள்ளார். அந்த படத்துக்கான தயாரிப்பாளர் இன்னும் முடிவாகாத நிலையில் தன் செலவில் திரைக்கதை வேலைகளை செய்ய சொல்லியுள்ளாராம் அஜித்.

இந்நிலையில் அஜித் ஆகஸ்ட் 3 ஆம் தேதி தன்னுடைய திரைவாழ்வில் காலடி எடுத்து வைத்தார். இந்த ஆண்டு ஆகஸ்ட் 3 ஆம் அவர் திரையுலகுக்கு வந்து 33 ஆண்டுகளை நிறைவு செய்கிறார். அதனால் அந்த நாளில் அவரின் அடுத்த படமான ‘அஜித் 64’ படத்தின் அப்டேட் வெளியாகும் என சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்