தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளர்ந்து வருகிறார் விஜய் தேவரகொண்டா. அவரின் சமீபத்தைய படங்கள் பெரிதாகக் கவனம் ஈர்க்கவில்லை என்றாலும் அவருக்கென்று ஒரு நிலையான மார்க்கெட்டை உருவாக்கி வைத்துள்ளார். இந்நிலையில் அவர் நடிப்பில் உருவான கிங்டம் திரைப்படம் நேற்று பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ரிலீஸானது.
இந்நிலையில் படம் ரிலீஸாகி ஐந்து நாட்கள் ஆகியுள்ள நிலையில் இந்த படத்தில் சில காட்சிகள் இலங்கை தமிழ் மக்களை அவதூறு செய்யும் விதமாக உள்ளதாக தமிழகத்தில் எதிர்ப்பு எழுந்துள்ளது. மதிமுக தலைவர் வைகோ இது சம்மந்தமாக கண்டனம் தெரிவித்து இந்த படம் தமிழ் நாட்டில் திரையிடப்படக் கூடாது எனக் கண்டித்தார். இந்நிலையில் ராமநாதபுரத்தில் இந்த படம் ஓடிய தியேட்டர் முன்பு மக்கள் ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர். இதையடுத்து அங்கு பரபரப்பான சூழல் உருவாக அந்த தியேட்டரில் காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.