பெயர் மாறும் விஜய் சேதுபதியின் அனபெல்லா சுப்ரமண்யம் திரைப்படம்!

Webdunia
புதன், 11 ஆகஸ்ட் 2021 (09:53 IST)
விஜய் சேதுபதி மற்றும் டாப்ஸி நடித்துள்ள திரைப்படம் நேரடியாக ஓடிடியில் நேரடியாக ரிலீஸாகவுள்ளதாக சொல்லப்படுகிறது.

கொரோனா முதல் லாக்டவுனுக்குப் பிறகு விஜய் சேதுபதி மற்றும் டாப்ஸி ஆகியோர் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் ஜெய்ப்பூர் ஆகிய இடங்களில் நடந்தது. இந்த படத்தின் பெயர் அனபெல் சுப்ரமண்யம் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக சில மாதங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. இந்த படத்தின் படப்பிடிப்பு எப்போதோ முடிந்து விட்ட நிலையில் ரிலிஸாகாமல் முடங்கிக் கிடந்தது. இந்நிலையில் இப்போது டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் நேரடியாக வெளியாக உள்ளதாக சொல்லப்படுகிறது.

ஆனால் படத்தில் ஒரு சிறிய மாற்றமாக படத்தின் தலைப்பு அனபெல் சேதுபதி என்று மாற்றப்பட்டுள்ளதாம். அதுபோலவே படத்தில் விஜய் சேதுபதியின் பெயரும் வீர சுப்ரமண்யம் என்பதற்கு பதிலாக வீர சேதுபதி எனவும் மாற்றப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்