அஜித் நடித்த குட் பேட் அக்லி படம் கடந்த வியாழக்கிழமை உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், இந்த படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் மிகப்பெரிய அளவில் வசூல் செய்து வருகிறது.
இந்த படத்தில் ஒரு சிறு வேடத்தில் நடித்திருந்தாலும், ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் பிரியா வாரியர். அதற்குக் காரணம் அவர் படத்தில் நடனமாடிய பாடல்தான். பல ஆண்டுகளுக்கு முன்னர் சிம்ரன் நடனத்தில் உருவான தொட்டு தொட்டு பேசும் சுல்தானா பாடலை ரி க்ரியேட் செய்து அதில் சிம்ரன் போல பிரியா வாரியரை அடவைத்திருந்தனர் படக்குழுவினர்.
அது தற்போது வைரலாகி வரும் நிலையில் அது குறித்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் பிரியா வாரியர். அதில் “சில ஆண்டுகளுக்கு முன்னர் அடார் லவ் படத்தில் நான் வைரல் ஆனது போல, இப்போது மீண்டும் வைரல் ஆகிவிட்டேன். சிம்ரன் நடனமாடிய தொட்டு தொட்டு பேசும் சுல்தானா பாடலுக்கு நான் சரியாக இருப்பேன் என நம்பிய இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் சாருக்கு நன்றி” எனக் கூறியுள்ளார்.