200 கோடி ரூபாய் வசூலை நோக்கி அஜித்தின் ‘குட் பேட் அக்லி’!

vinoth

செவ்வாய், 15 ஏப்ரல் 2025 (09:25 IST)
அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ படம் கடந்த வியாழக்கிழமை உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.  இந்நிலையில், இந்த படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் மிகப்பெரிய அளவில் வசூல் செய்து வருகிறது.

படத்தில் கதை என்பதோ, சுவாரஸ்யமான திரைக்கதை என்பதோ மருந்தளவுக்கும் இல்லை. அஜித்தின் முந்தைய ஹிட் படங்களின் இமேஜ்களை படத்தில் ஆங்காங்கே சொருகி அஜித் ரசிகர்களை கிச்சுகிச்சு மூட்டி விட்டுள்ளார் ஆதிக். படம் முழுவதும் அஜித் கதாபாத்திரத்தை மற்ற கதாபாத்திரங்கள் எல்லாம் வானளாவ புகழ்ந்து தள்ளுகின்றன. அவர் கூட கதாபாத்திரங்கள் கொடுக்கும் ‘பில்ட் அப்’ களை விட வில்லன்கள் கொடுக்கும் பில்ட் அப் ‘ஓவரா கூவுறாண்டா’ என்பது போல இருக்கிறது.

ஆனாலும் இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் ரசிகர் கூட்டம் திரையரங்குகளுக்குப் படையெடுத்து சென்று கொண்டிருக்கிறது. படம் வெளியாகி 5 நாட்களில் உலகளவில் 170 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது. அதனால் விரைவில் இந்த படம் 200 கோடி ரூபாய் வசூலை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்