ஷங்கர் படத்தில் நடிக்கும் வாய்ப்பை இழந்த விஜய் சேதுபதி! ஏன் தெரியுமா?

Webdunia
வெள்ளி, 18 பிப்ரவரி 2022 (15:45 IST)
ஷங்கர் ராம்சரண் தேஜா கூட்டணியில் உருவாகும் படத்தில் வில்லனாக நடிக்க எஸ் ஜே சூர்யா ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2 படத்தை இயக்கி வந்த நிலையில் திடீரென அந்த படத்தை கைவிட்டுவிட்டு தற்போது ராம்சரண் தேஜா நடித்த உள்ள தெலுங்கு படம் ஒன்றை இயக்கவுள்ளார். இந்த படத்தை தெலுங்கு சினிமாவின் முன்னணி தயாரிப்பாளராக இருந்து வரும் தில் ராஜு தயாரிக்கிறார். படத்தின் கதாநாயகியாக கியாரா அத்வானி அதிகாரப்பூர்வமாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கி நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டு இறுதிக்குள் இந்த படத்தின் மொத்த படப்பிடிப்பையும் முடித்து 2023 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் முடிவு செய்துள்ளாராம். இந்த படத்தில் முக்கியக் கதாபாத்திரங்களில் சுரேஷ் கோபி, ரஹ்மான் ஆகியோர் நடிக்கின்றனர். இந்நிலையில் வில்லனாக நடிக்க எஸ் ஜே சூர்யாவிடம் பேசி சம்மதம் வாங்கியுள்ளார்களாம். ஆனால் மாநாடு படத்தின் வெற்றிக்குப் பின்னர் அவரின் மார்க்கெட் அதிகமாகியுள்ள நிலையில் சம்பளமாக சுமார் 9 கோடி ரூபாய் வரை கொடுக்கப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்த வேடத்தில் முதலில் நடிக்க பேசப்பட்டது விஜய் சேதுபதியிடம்தானாம். அவரும் சம்மதித்து ஒரு மிகப்பெரிய தொகையை சம்பளமாகக் கேட்டுள்ளாராம். வழக்கமாக தெலுங்கு தயாரிப்பாளர்கள் நடிகர்களுக்கு சம்பளம் கொடுப்பதில் குறைவைக்க மாட்டார்கள். ஆனால் அப்படிப்பட்ட தயாரிப்பாளருக்கே ஷாக் கொடுக்கும் விதமாக அந்த தொகை இருந்ததால், தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் அடுத்த தேர்வாக எஸ் ஜே சூர்யாவை தேர்வு செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்