தில் ராஜுவின் ரிலீஸ் ப்ளானில் திடீர் மாற்றம்… விஜய்யின் வேண்டுகோளா?

Webdunia
வெள்ளி, 18 பிப்ரவரி 2022 (15:39 IST)
தெலுங்கு தயாரிப்பாளரான தில் ராஜு ஷங்கர் ராம்சரண் தேஜா படம் மற்றும் விஜய்யின் தளபதி 66 படம் ஆகிய இரண்டையும் தயாரித்து வருகிறார்.

பிரபல தெலுங்கு தயாரிப்பாளரான தில் ராஜு இப்போது ஒரே நேரத்தில் இரண்டு பேன் இந்தியா படங்களை தயாரித்து வருகிறார். ஷங்கர் ராம்சரண் தேஜா கூட்டணியில் உருவாகும் ஆர் சி 15 படத்தின் பாதி படப்பிடிப்பு முடிந்துள்ளது. அதே போல விரைவில் வம்சி இயக்கத்தில் விஜய் நடிக்க உள்ள தளபதி 66 படத்தின் படப்பிடிப்பும் தொடங்க உள்ளது.

முதலில் ஷங்கர் படத்தை தீபாவளிக்கும், விஜய் படத்தை பொங்கலுக்கும் ரிலீஸ் செய்யலாம் என்ற முடிவில் இருந்தாராம். ஆனால் இப்போது விஜய் படம் தீபாவளிக்கு ரிலிஸாகும் என சொல்லப்படுகிறது. விஜய்தான் தன்னுடைய படத்தை தீபாவளிக்கு ரிலிஸ் செய்யவேண்டும் என கேட்டுக்கொண்டதால் தில்ராஜு தனது முடிவை மாற்றிக்கொண்டதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்