கார்ப்பரேட் ஊழியராகும் விஜய் சேதுபதி

Webdunia
வியாழன், 2 ஜூன் 2016 (12:30 IST)
கே.வி.ஆனந்த் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் பெயரிடப்படாத படத்தில் அவரது கதாபாத்திரம் எப்படிப்பட்டது என்பது தெரிய வந்துள்ளது.


 
 
அனேகன் படத்தைத் தொடர்ந்து கே.வி.ஆனந்த் இயக்கும் படத்தையும் ஏ.ஜி.எஸ்.என்டர்டெய்ன்மெண்ட் தயாரிக்கிறது. விஜய் சேதுபதி, டி.ராஜேந்தர் நடிக்கின்றனர். படத்தின் நாயகி மற்றும் வில்லன் யார் என்பது இன்னும் முடிவாகவில்லை. ஹிப் ஹாப் ஆதி இசையமைக்க, அபி நந்தன் ஒளிப்பதிவு செய்கிறார்.
 
இந்தப் படத்தில் விஜய் சேதுபதி கார்ப்பரேட் நிறுவனம் ஒன்றில் பணிபுரிகிறவராகவும், டி.ராஜேந்தர் கார்ப்பரேட் ஏஜென்டாகவும் நடிக்கவிருப்பதாக கே.வி.ஆனந்த் கூறினார். இதன் படப்பிடிப்பு ஜுலை முதல்வாரத்தில் தொடங்குகிறது.

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
அடுத்த கட்டுரையில்