ஒரு வழியாக விஜய் சேதுபதியை லாக் செய்த இயக்குனர்!

Webdunia
வியாழன், 20 மே 2021 (18:43 IST)
விஜய் சேதுபதி கமலின் விக்ரம் படத்தில் நடிப்பதை உறுதி செய்துள்ளார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மிகப்பெரிய கமல் ரசிகர். அவரின் கைதி படத்தை விருமாண்டியின் தொடர்ச்சி என்றும் மாஸ்டர் படத்தில் நம்மவர் படத்தை நினைவுபடுத்தும் காட்சிகளும் உள்ளன. இந்நிலையில் லோகேஷ் கமலை வைத்து விக்ரம் என்ற படத்தை இயக்க உள்ளார்.  இதற்கான போட்டோஷூட் எல்லாம் நடந்து முடிந்திருந்தாலும், கமல் தேர்தலில் பிஸியாக இருந்ததால் படப்பிடிப்பு தள்ளிப்போனது. தேர்தலில் கமல் தோல்வி அடைந்ததை அடுத்து இப்போது படங்களில் நடிக்க ஆர்வமாக இருக்கிறார் என சொல்லப்படுகிறது.

இதனால் விரைவில் விக்ரம் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தில் வில்லனாக நடிப்பதாக ஏற்கனவே பஹத் பாசில் அறிவித்துள்ளார். இந்நிலையில் மற்றொரு கதாபாத்திரத்தில் தானும் நடிப்பதாக இப்போது விஜய் சேதுபதி கூறியிருந்தார். ஆனால் அவர் பல படங்களில் நடித்து வருவதால் தன்னால் தேதிகள் கொடுக்க முடிந்த போதுதான் வந்து நடித்துக் கொடுப்பேன். என்னை குறிப்பிட்ட தேதிகள் கொடுக்கும்படி வற்புறுத்தக் கூடாது எனக் கூறியிருக்கிறாராம்.

ஆனால் இதையெல்லாம் கேட்ட கமல் அதிருப்தி அடைந்ததாக சொல்லப்பட்டது. அதனால் விஜய் சேதுபதிக்கு பதில் வேறு யாரையாவது தேர்வு செய்ய சொல்லி லோகேஷிடம் சொன்னதாக சொல்லப்பட்டது. ஆனால் இப்போது லோகேஷ் பேச்சுவார்த்தை நடத்தி விஜய் சேதுபதியையே நடிக்க வைக்க சம்மதிக்க வைத்துவிட்டாராம்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்