பேரறிவாளனுக்கு குரல் கொடுத்த விஜய் சேதுபதிக்கு சீமான் பாராட்டு

Webdunia
புதன், 8 ஜூன் 2016 (15:18 IST)
பேரறிவாளனை விடுதலை செய்யக் கோரி வேலூரிலிருந்து சென்னை கோட்டைவரை வரும் 11 -ஆம் தேதி மோட்டார் சைக்கிள் பேரணி நடைபெற உள்ளது.


 


அதில் கலந்து கொள்ளுமாறு நடிகர் விஜய் சேதுபதி அழைப்புவிடுத்திருந்தார்.
 
"பேரறிவாளன் 25 வருடங்களாக சிறையில் வாடிக் கொண்டிருக்கிறார் என்பது நம் அனைவருக்கும் தெரியும். 
 
அதுவும் தனிமைச் சிறையில் இத்தனை ஆண்டுகளாக இருந்து வருகிறார்.
 
அவரை விசாரணை செய்த போலீஸ் அதிகாரியும், பேரறிவாளன் நிரபராதி என சொல்லியிருக்கிறார். பிறகு ஏன் அவரை விடுதலை செய்ய இவ்வளவு நாள் தாமதம் என்று தெரியவில்லை. 25 வருடங்கள் தனிமைச் சிறை என்பது மிகவும் கொடுமையானது. அவரை விடுதலை செய்வதற்காக வேலூரில் இருந்து கிளம்பும் பேரணியில் நாம் அனைவரும் பங்கெடுக்க வேண்டும். பேரணிக்கு அனுமதி கொடுத்த தமிழக அரசுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று விஜய் சேதுபதி கூறியிருந்தார்.
 
விஜய் சேதுபதியின் இந்தப் பேச்சுக்கு நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் பாராட்டு தெரிவித்துள்ளார். அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் கீழ்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
 
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிக்குண்டு 25 வருடமாக விடுதலைக்காகக் காத்து நிற்கும் என் தம்பிகள் மற்றும் அக்கா நளினி ஆகியோரின் விடுதலைக்காகக் குரல் கொடுத்த என் ஆருயிர் தம்பி விஜய் சேதுபதிக்கு என் அன்பும் பாராட்டுகளும். தொடர்ந்து போராடி எழுவரை மீட்போம்.. 
 
அன்பின் நெகிழ்ச்சியோடு, 
சீமான்...
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்....
அடுத்த கட்டுரையில்