லோகேஷ் கனகராஜ் படத்தின் இந்தி ரீமேக்கில் விஜய்சேதுபதி: பரபரப்பு தகவல்

Webdunia
வெள்ளி, 9 அக்டோபர் 2020 (17:27 IST)
லோகேஷ் கனகராஜ் இயக்கிய ’மாநகரம்’ திரைப்படம் சமீபத்தில் இந்தியில் ரீமேக் ஆக இருப்பதாகவும் இந்த படத்தை பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இயக்க இருப்பதாகவும் ஏற்கனவே வெளிவந்த செய்தியைப் பார்த்தோம் 
 
இந்த நிலையில் ’மாநகரம்’ படத்தில் உள்ள இரண்டு ஹீரோக்களில் ஒரு கேரக்டரில் விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாகவும் அதற்கான ஒப்பந்தமும் கையெழுத்தாகி விட்டதாகவும் கூறப்படுகிறது. இன்னொரு ஹீரோ கேரக்டரின் பாலிவுட்டின் முன்னணி நடிகர் ஒருவர் நடிக்க இருக்கிறார் 
 
அதேபோல் இந்த படத்தில் ரெஜினா நடித்த நாயகியாக பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகை ஒருவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அனேகமாக காத்ரீனா கைஃப் நடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது
 
மேலும் இந்த படத்திற்காக மும்பையில் பல இடங்களில் லொகேஷன்களை இயக்குனர் சந்தோஷ்சிவன் பார்த்து வைத்திருப்பதாகவும் 2021 ஆம் ஆண்டு ஜூன் மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது 
 
இந்த படத்தின் அட்டகாசமான டைட்டில் தயாராகி விட்டதாகவும் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் விரைவில் வெளியாகும் என்றும் அந்த போஸ்டரில் விஜய் சேதுபதியும் இருப்பார் என்றும் கூறப்படுகிறது. அது மட்டுமன்றி இந்த படத்தில் முதல்முறையாக விஜய் சேதுபதி தனது சொந்த குரலில் ஹிந்தியில் டப்பிங் பேச உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்