புஷ்பா படம் என்ன ஆனது? அதற்குள் விஜய் தேவாரகொண்டாவுடன் அடுத்த படத்தை அறிவித்த இயக்குனர்!

திங்கள், 28 செப்டம்பர் 2020 (16:10 IST)
இயக்குனர் கடைசியாக இயக்கிய ரங்கஸ்தலம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதை அடுத்து புஷ்பா என்ற படத்தை ஆரம்பித்தார்.

பிரபல தெலுங்கு நடிகர் அர்ஜூன் அடுத்ததாக நடிக்கும் ’புஷ்பா’ என்ற படத்தை இயக்குவதாக இருந்தார் இயக்குனர் சுகுமார். இந்த படம் ஆந்திராவில் நடக்கும் செம்மரக் கடத்தல் பற்றியக் கதை என சொல்லப்பட்டதால் மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஆனால் படப்பிடிப்பு கொரோனா காரணமாக தாமதமானது.

இந்நிலையில் இந்த படத்தின் இயக்குனர் சுகுமார் இப்போது விஜய் தேவாரகொண்டா நடிக்கும் படத்தை இயக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதனால் புஷ்பா படம் என்ன ஆனது எனக் கேள்வி எழ, புஷ்பா படத்தை முடித்துவிட்டு அதன் பிறகு 2022 ஆம் ஆண்டுதான் விஜய் படத்தை இயக்க உள்ளாராம் சுகுமார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்