இன்றே திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் ‘க/பெ ரணசிங்கம்: புதிய தகவல்!

வியாழன், 1 அக்டோபர் 2020 (10:45 IST)
இன்றே திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் ‘க/பெ ரணசிங்கம்
நடிகர் விஜய் சேதுபதி, நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் விருமாண்டி இயக்கத்தில் உருவான க/பெ ரணசிங்கம்’ என்ற திரைப்படம் ஓடிடியில் நாளை முதல் வெளியாக உள்ளது. இன்று நள்ளிரவு 12 மணி முதலே இந்த படத்தை ஓடிடியில் பார்க்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் நாளை ஓடிடியில் ரிலீசாக இருக்கும் இந்த படம் இன்று மாலையே ஒரு சில நாடுகளில் திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது. குறிப்பாக சிங்கப்பூரில் 4 திரை அரங்குகளில் இந்தப் படம் இன்று மாலை ரிலீசாக உள்ளதாகவும் திரையரங்குகள் குறித்த பெயர்களுடன் கூடிய விளம்பரமும் தற்போது வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
இந்தியாவிலும் பெங்களூரு, கொச்சின் உள்ளிட்ட ஒரு சில நகரங்களில் டிரைவ்-இன் தியேட்டரில் க/பெ ரணசிங்கம்’ திரைப்படம் நாளை முதல் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே இந்த படத்தின் டீசர் டிரைலர் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் இந்த படம் திரையரங்குகளிலும் ஓடிடியிலும் நல்ல வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, ஆனால் அதே நேரத்தில் இந்த படத்தில் விஜய் சேதுபதி வெறும் அரை மணி நேரம் தான் நடித்துள்ளார் என்றும் படம் முழுவதும் ஐஸ்வர்யா ராஜேஷின் காட்சிகள்தான் அதிகம் உள்ளதாகவும் ஒரு வதந்தி பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்