விதார்த், பாரதிராஜா ஆகியோர் நடிப்பில் உருவான குரங்கு பொம்மை படத்தை இயக்கியவர் நித்திலன். இந்த படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் அடுத்து அவர் விஜய் சேதுபதி நடிக்கும் மகாராஜா இயக்கி வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த ஆண்டு மத்தியில் தொடங்கி இறுதியில் முடிவடைந்தது. இது விஜய் சேதுபதியின் 50 ஆவது படமாக உருவாகி வருகிறது.
இந்த படத்தில் அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், நட்ராஜ் நட்டி மற்றும் பாய்ஸ் மணிகண்டன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். படத்துக்கு ஆகானாஷ் லோக்நாத் இசையமைக்கிறார்.
ஷூட்டிங் முடிந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் ரிலீஸில் ஒரு சிக்கல் எழுந்துள்ளது. இந்த படத்தின் டிஜிட்டல் மற்றும் சேட்டிலைட் உரிமை இன்னும் விற்பனையாகததால் படத்தை ரிலீஸ் செய்வதில் தாமதம் எழுந்துள்ளது.