கடந்த சில ஆண்டுகளாக பழைய படங்கள் ரி ரிலீஸ் ஆகி ரசிகர்கள் இடையே ஆதரவைப் பெற்று வருகின்றன. இதில் உச்சபட்ச வெற்றியைப் பெற்றது விஜய்யின் கில்லி திரைப்படம். கடந்த ஆண்டு இந்த படம் கிட்டத்தட்ட 300க்கும் மேற்பட்ட திரைகளில் ரி ரிலீஸ் செய்யப்பட்டு 20 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது. ரி ரிலீஸில் ஒரு படம் இவ்வளவு தொகை வசூலித்திருப்பது இதுவே முதல் முறை.
அந்த வரிசையில் 8 ஆண்டுகளுக்கு முன்னர் ரிலீஸாகி சூப்பர் ஹிட் ஆன மெர்சல் திரைப்படம் ஜூன் 20 ஆம் தேதி ரி ரிலீஸாகவுள்ளது. மெர்சல் படத்தை அட்லி இயக்க தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்தது. சமந்தா, காஜல் அகர்வால் மற்றும் எஸ் ஜே சூர்யா ஆகியோர் நடிக்க ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்திருந்தார்.