ரசிகர்களுடன் விஜய் திடீர் சந்திப்பு! காரணம் இதுவா?

Webdunia
ஞாயிறு, 20 நவம்பர் 2022 (10:46 IST)
நடிகர் விஜய் நடித்துள்ள வாரிசு படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில் இன்று விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் திடீர் சந்திப்பு நடைபெறுகிறது.

நடிகர் விஜய் நடித்து வம்சி இயக்கியுள்ள படம் ‘வாரிசு’. இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படம் 2023ம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாக திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் நடிகர் விஜய் திடீர் சந்திப்பில் ஈடுபட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

வாரிசு படத்துக்கு போட்டியாக அஜித்தின் துணிவு படமும் பொங்கலுக்கு வெளியாவதால் இரண்டு படங்களுக்கும் தியேட்டர்கள் கிடைப்பதில் போட்டி எழுந்துள்ளது. துணிவு படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியிடும் நிலையில் கிட்டத்தட்ட திரையரங்குகளை முடிவு செய்துள்ளது. ஆனால் வாரிசுக்கு தமிழகத்தில் தியேட்டர் கிடைப்பது மற்றும் தெலுங்கு வெளியீடு உள்ளிட்டவற்றிலும் சிக்கல் எழுந்துள்ளது.

இந்நிலையில் இன்று மக்கள் இயக்கத்தினருடன் ஆலோசனையில் விஜய் ஈடுபட்டுள்ளதால் பட வெளியீட்டை தள்ளி வைப்பது குறித்து ஆலோசிக்கிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Edit By Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்