கிளைமேக்ஸ் காட்சிக்காக தயாராகும் வாரிசு டீம்… லேட்டஸ்ட் அப்டேட்!

சனி, 19 நவம்பர் 2022 (10:11 IST)
விஜய் நடித்து வரும் வாரிசு படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில் தற்போது இறுதிகட்ட ஷூட்டிங் பணிகள் நடந்து வருகின்றன.

வம்சி இயக்கத்தில் தில் ராஜு தயாரிக்கும் வாரிசு படத்தில் விஜய்யுடன் ராஷ்மிகா மந்தனா, பிரபு, பிரகாஷ் ராஜ் மற்றும் ஜெயசுதா ஆகியோர் நடிப்பதை படக்குழு உறுதி செய்துள்ளது. இந்த படம் 2023 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர்  படத்தில் இடம்பெற்றுள்ள ரஞ்சிதமே பாடல் வெளியாகி ஹிட் ஆகியுள்ளது. அதே நேரத்தில் பாடல் முன்பே வெளியாக பழைய சினிமா பாடல்களின் மெட்டுகளில் அமைந்துள்ளதாக விமர்சனங்களும் எழுந்துள்ளன.

இந்நிலையில் இப்போது வாரிசு படத்தின் இறுதிகட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. தற்போது ஒரு பாடல் படமாக்கப்பட்டு வருவதாகவும், அடுத்து ஐதராபாத்தில் க்ளைமேக்ஸ் காட்சிகள் 10 நாட்கள் படமாக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்