லியோ படத்தின் சிறப்புக் காட்சி எத்தனை மணிக்கு?... அரசாணையால் எழுந்த குழப்பம்!

Webdunia
வெள்ளி, 13 அக்டோபர் 2023 (07:33 IST)
விஜய், சஞ்சய் தத், அர்ஜுன், திரிஷா, மிஷ்கின் மற்றும் கௌதம் மேனன் என ஏகப்பட்ட நடிகர்கள் நடித்துள்ள லியோ திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க லலித் குமார் தயாரித்துள்ளார். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவை மேற்கொள்ள அனிருத் இசையமைத்துள்ளார். படம் அக்டோபர் 19 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது

இந்நிலையில் இந்த படத்தின் சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு நேற்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. ஆனால் அரசாணயில் சிறப்புக் காட்சிகள் எத்தனை மணிக்கு தொடங்க வேண்டும் என்பது குறித்து எந்த தகவலும் இடம்பெறவில்லை.

இதனால் அதிகாலை 5 மணிக்கா அல்லது காலை 8 மணிக்கா சிறப்புக் காட்சியா என்பதில் தியேட்டர் உரிமையாளர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்கான பதில் விரைவில் தயாரிப்பாளர் லலித் தரப்பில் இருந்து வரும் என சொல்லப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்