''முத்து படத்தை 30 முறை பார்த்த ரசிகர்''.. நெகிழ்ந்த சூப்பர் ஸ்டார்

Webdunia
வியாழன், 12 அக்டோபர் 2023 (19:45 IST)
நெல்சன்  இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான படம் ஜெயிலர். இப்படம் வசூல் சாதனை படைத்துள்ள நிலையில், இப்படத்துக்குப் பிறகு ரஜினிகாந்த் த.செ.ஞானவேல் இயக்கும் அடுத்த படத்தில் நடிக்க உள்ளார்.

இந்த படத்தின் பூஜை சமீபத்தில் சென்னையில் நடந்தது. இன்று முதல் ஷூட்டிங் திருவனந்தபுரத்தில் தொடங்குகிறது. படத்தில் துஷாரா விஜயன், ரித்திகா சிங், மஞ்சு வாரியர், ராணா டகுபதி, பஹத் பாசில் மற்றும் அமிதாப் பச்சன் ஆகியோர் நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இந்த படத்தின் முதல் கட்ட ஷூட்டிங்குக்காக படக்குழுவினர் ரஜினியோடு திருவனந்தபுரத்துக்கு சமீபத்தில் சென்ற    நிலையில் அங்கு  பூஜையுடன் சில காட்சிகள் படமாக்கப்பட்டன.

இதையடுத்து, திருநெல்வேலி மாவட்டம் பணகுடியில் தலைவர் 170 பட ஷூட்டிங்  நடைபெற்று வருகிறது. 

நடிகர் ரஜினிகாந்த் காரில் சென்று கொண்டிருக்கும்போது  அவரைக் காண அவரது காரை ரசிகர்கள் பின் தொடர்ந்தனர்.

இன்று தனது ரசிகர்களை பார்த்து காரை நிறுத்திய ரஜினிகாந்த், ரசிகர்களுடன் பேசினார். அப்போது திருநெல்வேலி மேட்டு  தெருவைச் சேர்ந்த ஒரு ரசிகர்கள் தன் செல்போனில் வீடியோ எடுத்தபடி, ஒரு 'தலைவா முத்து படத்தை முப்பதுமுறை பார்த்திருக்கிறேன் தலைவா' என்று புன்னகையுடன் கூறினார்.

இதைக் கேட்ட ரஜினிகாந்த் நெகிழ்ச்சி அடைந்தார். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்