கைமாறிய ‘ஜனநாயகன்’ ஓடிடி வியாபாரம்… டல்லடிக்கும் சேட்டிலைட் பிஸ்னஸ்!

vinoth

திங்கள், 13 அக்டோபர் 2025 (15:27 IST)
முழுநேர அரசியல்வாதியாகியுள்ள விஜய் தற்போது ‘ஜனநாயகன்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். அந்த படத்தின் பின் தயாரிப்புப் பணிகள் தற்போது நடந்து வருகின்றன. இந்த படம் ரிலீஸானதும் அவர் சினிமாவை விட்டு முழு நேர அரசியலுக்கு செல்லவுள்ளார். அதனால் படத்தின் மீது மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்க, சத்யன் சூர்யன் ஒளிப்பதிவு செய்கிறார். KVN புரொடக்‌ஷன்ஸ் என்ற நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடிக்க முக்கிய வேடங்களில் மமிதா பைஜு, பிரகாஷ் ராஜ், பாபி தியோல் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். கடந்த ஆண்டு இறுதியில் இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கிய நிலையில் பெரும்பாலானக் காட்சிகள் சென்னை பனையூரில் உள்ள ஸ்டுடியோவில் படமாக்கப்பட்டது. அடுத்த ஆண்டு ஜனவரி 9 ஆம் தேதி இந்த படம் ரிலீஸாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கமாக விஜய்யின் படங்கள்  அறிவித்ததுடன் அதன் அனைத்து வியாபாரப் பேச்சுவார்த்தைகளையும் தொடங்கிவிடுவார்கள். ஆனால் இந்த முறை படத்தின் வியாபாரம் டல்லடிக்கிறது. நெட்பிளிக்ஸ் நிறுவனம் முதலில் இந்த படத்தை சுமார் 125 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளதாக சொல்லப்பட்டது. ஆனால் இப்போது ப்ரைம் வீடியோ நிறுவனம் 109 கோடி ரூபாய்க்குதான் ‘ஜனநாயகன்’ படத்தை வாங்கியுள்ளதாக சினிமா பத்திரிக்கையாளர் ஜெ பிஸ்மி தெரிவித்துள்ளார். அதே போல இந்த படத்தின் சாட்டிலைட் வியாபாரம் இன்னும் நடக்கவில்லை என்றும் சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்