சூரி & சுசீந்திரன் கூட்டணியில் ஒரு படம்… தயாரிப்பாளர் யார் தெரியுமா?

vinoth

திங்கள், 13 அக்டோபர் 2025 (09:53 IST)
விடுதலை, கருடன், கொட்டுக்காளி, விடுதலை 2 மற்றும் மாமன் என அடுத்தடுத்து வெற்றிப் படங்களாகக் கொடுத்து தன்னை ஒரு கதாநாயகனாக நிலை நிறுத்திக் கொண்டுள்ளார் சூரி. இதனால் அவர் படங்களுக்கென ஒரு மார்க்கெட் உருவாகி வருகிறது. இருந்தாலும் தேர்ந்தெடுத்துக் கதைகளில் நடித்து வருகிறார்.

இதையடுத்து சூரி ‘விடுதலை 1 & 2’ படங்களின் தயாரிப்பாளர் எல்ரெட் குமார் தயாரிப்பில் அடுத்து மண்டாடி என்ற படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை வெற்றிமாறனின் இணை இயக்குனரும், செல்ஃபி படத்தின் இயக்குனருமான மதிமாறன் இயக்குகிறார். ஜி வி பிரகாஷ் இசையமைக்கிறார். கடலை சுற்றியக் கதைக்களமாக படம் உருவாகி வருகிறது.

இந்நிலையில் சூரியின் அடுத்த படத்தை – அவருக்கு திருப்புமுனை கதாபாத்திரம் கொடுத்த- வெண்ணிலா கபடிக்குழு இயக்குனர் சுசீந்திரன் இயக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. சமீபகாலமாக சுசீந்திரன் இயக்கிய படங்கள் எல்லாம் படுதோல்வி அடைந்து வருகின்றன. அவர் இயக்கிய ‘வள்ளிமயில்’ திரைப்படம் பாதியிலேயேக் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இந்நிலையில் சூரியோடு அவர் இணையும் திரைப்படம் திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தை சூரியே தயாரிக்கவுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இந்த படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கும் என சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்