மெர்சல் படத்தின் கிராபிக்ஸ் காட்சிகள் வெளியீடு: இணையத்தில் வைரல்

Webdunia
வியாழன், 21 டிசம்பர் 2017 (02:25 IST)
இளையதளபதி விஜய் நடித்த 'மெர்சல்' திரைப்படம் இந்த ஆண்டின் மிகப்பெரிய வெற்றி பெற்ற படங்களில் ஒன்றாக கருதப்பட்டு வருகிறது. இந்த படத்திற்கு ஏற்பட்ட எதிர்ப்பே இந்த படத்தின் அபார வசூலுக்கு காரணம் என்று கூறப்படுகிறது

இந்த நிலையில் இந்த படத்தின் கிராபிக்ஸ் காட்சிகள் அடங்கிய வீடியோ தொகுப்பு ஒன்றை படக்குழுவினர் சற்றுமுன்னர் இணையதளங்களில் வெளீயிட்டுள்ளனர். இந்த வீடியோ விஜய் ரசிகர்களின் பேராதரவை பெற்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது

3 நிமிடம் 46 வினாடிகள் ஓடும் இந்த வீடியோவில் மெர்சல் படத்தில் இடம்பெற்ற கிராபிக்ஸ் காட்சிகளுடன் கூடிய காட்சிகளும், கிராபிக்ஸ் இல்லாத காட்சிகளும் உள்ளன.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்