விஜய் படத்தை இயக்குகிறவர்கள் பட்டியலில் செல்வராகவன் பெயரும் இடம்பெற்றுள்ளது. விஜய்யின் 60 -வது படமான பைரவாவை பரதன் இயக்கி வருகிறார். 2017 பொங்கலுக்கு அப்படம் வெளியாகிறது. 61 -வது படத்தை ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்க, அட்லி இயக்குகிறார்.
62 -வது படத்தை செல்வராகவன் இயக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
செல்வராகவன் விஜய்யிடம் ஒரு கதை கூறியிருக்கிறார். அது அவருக்குப் பிடித்திருப்பதாகவும், தனுஷின் வுண்டர்பார் அப்படத்தை தயாரிக்கலாம் என பேச்சு எழுந்துள்ளது.
தற்போது நெஞ்சம் மறப்பதில்லை படத்தில் பிஸியாக இருக்கும் செல்வராகவன், அடுத்து சந்தானம் மற்றும் ரெஜினா கஸாண்ட்ராவை வைத்து ஒரு படம் எடுக்கயிருக்கிறார். இப்படங்கள் முடிந்த பிறகு விஜய்62 படம் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் இது குறித்து அதிக தகவல்களை எதிர்பார்க்கலாம்.