நயன்தாரா- விக்னேஷ் சிவன் கும்பகோணம் கோயிலுக்கு சென்றது எதற்கு?

Webdunia
வெள்ளி, 30 செப்டம்பர் 2016 (12:37 IST)
விஜய் சேதுபதி, நயன்தாரா நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படம் நானும் ரவுடிதான். இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியாகியுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பின்போது இயக்குனருக்கும்  நயன்தாராவுக்கும் காதல் மலர்ந்ததாக கூறப்படுகிறது. அதனை உறுதி செய்யும் வகையில் இருவரும் நெருக்கமாக இருப்பது போன்ற புகைப்படங்கள் வெளியாகின.


 

இந்நிலையில் இவர்கள் இருவரும் கும்பகோணம் கோயிலுக்கு திடீர் பயணம் செய்தனர். எதற்காக இவர்கள் கும்பகோணம் சென்றார்கள் என்று திரையுலகினர் கேள்வி எழுப்பி வரும் நிலையில் தங்களது அடுத்த படம் வெற்றி பெற வேண்டும் என்ற வேண்டுதலுக்காகவே சென்றது தெரியவந்தது. விக்னேஷ் சிவன் அடுத்து சூர்யா நடிப்பில் தானா சேர்ந்த கூட்டம் என்ற படத்தை இயக்குகிறார். இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் நாயகி இன்னும் அறிவிக்கப்படவில்லை.
 
அடுத்த கட்டுரையில்