சிவகார்த்திகேயனுக்கு விஜய் பட இயக்குநர் வாழ்த்து !!

Webdunia
புதன், 27 ஜனவரி 2021 (17:38 IST)
நடிகர் சிவகார்த்திகேயன் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் டான் என்ற படத்தில்  நடிப்பது உறுதியாகியுள்ளது. இதுகுறித்து இயக்குநர் அட்லி சிவகார்த்திகேயனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் இளம் நடிகர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் உருவாகி வரும் அயலான் படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் முடிவடைந்தது. இப்படத்தை ரவிக்குமார் இயக்கியுள்ளார். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

மேலும், சிவகார்த்தியன் நடிப்பில் உருவாகியுள்ள மற்றோரு படம் டாக்டர். நெல்சன் இயக்கியுள்ள இப்படம் வெளியீட்டிற்கு தயார் நிலையில் உள்ளது.

இந்நிலையில், இன்று காலை சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தின் டைட்டிலை அலைகா நிறுவனம் அறிவித்தது.

இப்படத்திற்கு ’டான்’ என்றும் இந்த படத்தை சிபி சக்கரவர்த்தி என்பவர் இயக்க இருக்கிறார் என்றும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க இருக்கிறார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இயக்குநர் அட்லி தனது டுவிட்டர் பக்கத்தில், வாழ்த்துகள் டா சிபி தம்பி.ஆல் த வெறி பெஸ்ட் ஃபார் #டன். நண்பன் சிவகார்த்திகேயனுக்கும், அனிருத்திற்கும் நன்றி. எனது முக்கியமான வாழ்த்துகளை லைகா நிறுவனத்தின் கலையரசுக்குத் தெரிவித்துக்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்