காமெடி நடிகரின் காரை ஓட்டிப் பார்த்த விஜய்

Webdunia
செவ்வாய், 15 ஆகஸ்ட் 2017 (20:32 IST)
காமெடி நடிகர் சூரியின் புது காரை ஓட்டிப் பார்த்து, சூரியை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறார் விஜய்.


 

 
நேசன் இயக்கிய ‘ஜில்லா’ படத்தில் காமெடி கேரக்டரில் நடித்திருந்தார் சூரி. ஆனால், அதற்கு முன்பே விஜய்யுடன் ஒரு படத்தில் நடித்திருந்தார் சூரி. அந்தப் படம், ‘வேலாயுதம்’. சின்ன கேரக்டராக இருந்தாலும் கவனிக்கப்பட வேண்டிய கேரக்டராக அது இருந்ததால், அப்போதே சூரியைக் கூப்பிட்டுப் பாராட்டியிருக்கிறார் விஜய்.
 
அதுமட்டுமல்ல, சூரி முதன்முதலாக கார் வாங்கியபோது, சாவியை விஜய்யிடம் கொடுத்து ‘நீங்கள் தான் முதலில் ஓட்ட வேண்டும்’ என்று அன்புக் கட்டளை போட்டிருக்கிறார். விஜய்யும் அந்தக் காரில் ஒரு ரவுண்ட் அடித்துவிட்டு, இதைவிட பெரிய காராக சீக்கிரமே வாங்க வேண்டும் எனக் கூறியுள்ளார். ‘விஜய் எளிமையான, ஆதரவான மனிதர்’ என்கிறார் சூரி.
அடுத்த கட்டுரையில்