கொஞ்ச நஞ்ச பேச்சா..? அடி வாங்கிய “லைகர்” – வருத்தம் தெரிவித்த விஜய் தேவரகொண்டா!

Webdunia
புதன், 31 ஆகஸ்ட் 2022 (09:44 IST)
விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான லைகர் படம் தோல்வியை தழுவிய நிலையில் திரையரங்க உரிமையாளரிடம் விஜய் தேவரகொண்டா வருத்தம் தெரிவித்துள்ளார்.

தெலுங்கு இயக்குனர் பூரி ஜெகன்னாத் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடித்து வெளியான படம் “லைகர்”. மைக் டைசன், ரம்யா கிருஷ்ணன், அனன்யா பாண்டே உள்ளிட்ட பலர் நடித்த இந்த படம் இந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பேன் இந்தியா படமாக வெளியானது.

பிரம்மாண்டமாக எடுக்கப்பட்ட இந்த படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய முடியாததால் சுமாரான அளவு வசூலையே பெற்றது. இது ஒருபக்கம் இருக்க லைகர் ரிலீஸுக்கு முன்னால் விஜய் தேவரகொண்டா ட்விட்டரில் பேசிய பேச்சுகளும் படத்தின் தோல்விக்கு ஒரு காரணம் என பேசிக் கொள்ளப்படுகிறது.

லைகர் படத்தை புறக்கணிக்க வேண்டும் என ஹேஷ்டேகுகள் ட்ரெண்டான போது ”யார் தடுக்கிறார்கள் என்று பார்க்கலாம்” என விஜய் தேவரகொண்டா ட்வீட் போட்டார். இதன் காரணமாக மக்கள் யாரும் படம் பார்க்க திரையரங்கிற்கே வரவில்லை என மும்பை திரையரங்க உரிமையாளர் ஒருவர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் அவரை நேரில் சந்தித்த விஜய் தேவரகொண்டா தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்துக் கொண்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்