விஜய் ஆண்டனி படங்களுக்கு இப்படி ஒரு சோதனையா?... யாருமே சீண்டாததற்கு காரணம் என்ன?

சனி, 25 பிப்ரவரி 2023 (07:49 IST)
நடிகர் விஜய் ஆண்டனி இசையமைப்பாளராக இருந்து தமிழ் சினிமாவில் கதாநாயகனாக வளர்ந்துள்ளார். விஜய் ஆண்டனி நடிப்பில் தற்போது 8 படங்கள் உருவாகி ரிலீஸூக்கு காத்திருக்கின்றன. இதில் கொலை, ரத்தம், பிச்சைக்காரன் 2, தமிழரசன் ஆகிய படங்கள் அடுத்து ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இப்போது அவர் இந்த படங்கள் ரிலீஸ் ஆகும் வரை புதிய படங்கள் எதுவும் ஒப்பந்தம் ஆகவேண்டாம் என்ற முடிவில் உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் கடைசியாக அவர் நடிப்பில் வெளியான படங்கள் தோல்வியைத் தழுவியதை அடுத்து இப்போது உருவாகி ரிலீஸுக்கு தயாராக இருக்கும் அவரது படங்களை ஓடிடி நிறுவனங்கள் மற்றும் தொலைக்காட்சி நிறுவனங்கள் வாங்க மறுப்பதாக சொல்லப்படுகிறது. இதனால் இந்த படங்கள் திரையரங்குகளில் வெளியாகி ஹிட்டானால் மட்டுமே இந்த மார்க்கெட்டுகள் திறக்கும் என சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்