மோகன்லால் நடித்த எம்புரான் திரைப்படம் கடந்த மார்ச் மாதம் 27 ஆம் தேதி ரிலீஸாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது. இந்த படத்தின் தொடக்கத்தில் 2002 ஆம் ஆண்டு நடந்த குஜராத் கலவரத்தின் சிலக் காட்சிகள் இடம்பெற்றிருந்தன. சில இந்து அமைப்புகள் இதில் உள்ள சில காட்சிகள் குறித்து எதிர்ப்பு தெரிவிக்க, உடனடியாக படக்குழு 17 இடங்களில் காட்சிகளை வெட்டவும், வசனங்களை ம்யூட் செய்து படத்தை மறு தணிக்கை செய்துள்ளது.
இந்நிலையில் தற்போது லூசிஃபர் 3 பற்றி சமூகவலைதளங்களில் பல தகவல்கள் பரவி வருகின்றன. அதன்படி மூன்றாம் பாகத்தின் பெரும்பாலானக் காட்சிகளை நீருக்கடியில் படமாக்கவுள்ளதாக சில இணையதளங்களில் செய்தி வெளியாகின. ஆனால் அதை இயக்குனர் பிரித்விராஜன் தரப்பு மறுத்துள்ளது. அவர் “சில இணையதளங்கள் ஆதாரமற்ற பொய்ச் செய்திகளை வேண்டுமென்றே பரப்புகிறார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.