விஜய் ஆண்டனியின் கொலை திரைப்படத்தின் அப்டேட்டை கொடுத்த தயாரிப்பாளர்!

வியாழன், 6 ஜூலை 2023 (14:35 IST)
இயக்குனர் பாலாஜி குமார் இயக்கியுள்ள கொலை திரைப்படத்தில் விஜய் ஆண்டனி, ரித்திகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இயக்குனர் பாலாஜி இதற்கு முன் சில ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான விடியும் முன் என்ற திரைப்படத்தை இயக்கியவர். பிரபல தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் தயாரித்துள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டே முடிந்தாலும் சில பல காரணங்களால் ரிலீஸ் தாமதமாகி வந்தது.

இடையில் விஜய் ஆண்டனி விபத்தில் சிக்கி ஓய்வில் இருந்ததால் இந்த படத்தின் ரிலீஸ் மேலும் தாமதமாகியது. இந்நிலையில் இப்போது இந்த படத்தின் ரிலீஸ் ஜூலை 21 ஆம் தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த படம் பற்றி ட்வீட் செய்துள்ள தனஞ்செயன் “ கொலை படத்தின் முதல் காப்பி பார்த்து லாக் செய்யப்பட்டது. இன்று படத்தின் சென்சார் நடக்க உள்ளது.” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்