மாமன்னன் படத்தின் முதல் நாள் பாக்ஸ் ஆபீஸ் கலெக்‌ஷன் எவ்வளவு தெரியுமா?

வெள்ளி, 30 ஜூன் 2023 (14:11 IST)
மாமன்னன் திரைப்படத்தில் வடிவேலு, பஹத் பாசில், கீர்த்தி சுரேஷ் ஆகியோர்  முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க, ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார்.  மாரி செல்வராஜ் கர்ணன் படத்துக்குப் பிறகு இயக்கியுள்ளார். இந்த படம் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று ரிலீஸ் ஆகிறது.

ரிலீஸ் ஆனதில் இருந்து பெரும்பாலும் நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றுள்ள இந்த திரைப்படம் முதல் நாளில் பெரிய அளவில் ரசிகர்களை தியேட்டர் நோக்கி இழுத்துள்ளது.

இந்நிலையில் முதல் நாளில் மட்டும் இந்த படம் உலகம் முழுவதும் சுமார் 10 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. நேற்று பக்ரீத் விடுமுறை தினம் என்பதால் மிகப்பெரிய கலெக்‌ஷன் கிடைத்துள்ளது என சொல்லப்படுகிறது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்