'தளபதி 61' படத்தில் விஜய்-வடிவேலு கெட்டப்புகள்

Webdunia
புதன், 29 மார்ச் 2017 (05:07 IST)
இளையதளபதி விஜய் நடித்து வரும் 'தளபதி 61' படத்தின் இரண்டு கட்ட படப்பிடிப்புகள் முடிந்துவிட்ட நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் ராஜஸ்தானில் நடைபெறவுள்ளது. இந்த படப்பிடிப்புக்கான ஆரம்பகட்ட பணிகள் தொடங்கிவிட்டது.








 





இந்நிலையில் இந்த மூன்றாவது கட்ட படப்பிடிப்பில் விஜய்யுடன் வடிவேலு கலந்து கொள்ளவிருப்பதாக செய்திகள் வெளிவதுள்ளது. மேலும் இந்த படத்தில் விஜய்க்கும், வடிவேலுவுக்கும் ஏகப்பட்ட கெட்டப்புகள் இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

இதுவரை இந்த படத்தின் 42 நாட்கள் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாகவும், ராஜஸ்தான் படப்பிடிப்பை அடுத்து படக்குழுவினர் ஐரோப்பிய நாடுகளுக்கு செல்லவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

வரும் தீபாவளி தினத்தில் 'தளபதி 61' படம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் டைட்டில் வைக்கப்படாத இந்த படத்தில் விஜய், காஜல் அகர்வால், சமந்தா, நித்யாமேனன், சத்யராஜ், எஸ்.ஜே.சூர்யா, வடிவேலு, சத்யன், கோவை சரளா உள்பட பலர் நடித்து வருகின்றனர். அட்லி இயக்கத்தில் உருவாகி இந்த படத்தை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்துவருகிறது. இந்த படத்திற்கு ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த கட்டுரையில்