தேவியை அடுத்து லட்சுமியை தேடி செல்லும் விஜய்-பிரபுதேவா

Webdunia
புதன், 21 பிப்ரவரி 2018 (18:41 IST)
பிரபல இயக்குனர் விஜய் இயக்கத்தில் பிரபுதேவா, தமன்னா நடித்த 'தேவி' திரைப்படம் கடந்த 2016ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வெற்றியை பெற்றது. இந்த படத்தை அடுத்து மீண்டும் ஒரு படத்தில் விஜய்-பிரபுதேவா கூட்டணி இணைந்துள்ளது. இந்த படத்தின் நாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது
 
இந்த நிலையில் இந்த படத்தின் டைட்டில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. 'லட்சுமி' என்பதுதான் இந்த படத்தின் டைட்டில். இந்த படத்தின் டைட்டில் போஸ்டரை தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ள பிரபுதேவா, இன்று இரவு 9 மணிக்கு பர்ஸ்ட்லுக் போஸ்டரை வெளியிடுவதாக தெரிவித்துள்ளார்.
 
சாம் சிஎஸ் இசையமைக்கும் இந்த படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவும், அந்தோணி படத்தொகுப்பு பணீயும் செய்கின்றனர். இந்த படம் இவ்வருட இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்