தன்னுடைய போர்ஷனை முடித்துக் கொடுத்த வரலட்சுமி சரத்குமார்

செவ்வாய், 20 பிப்ரவரி 2018 (18:09 IST)
‘மிஸ்டர் சந்திரமெளலி’ படத்தில் தன்னுடைய போர்ஷனை முடித்துக் கொடுத்துவிட்டார் வரலட்சுமி சரத்குமார்.

 
திரு இயக்கத்தில் உருவாகிவரும் படம் ‘மிஸ்டர் சந்திரமெளலி’. கார்த்திக், கெளதம் கார்த்திக், ரெஜினா ஆகியோர் நடித்து வருகின்றனர். விஜி சந்திரசேகர், சந்தோஷ் பிரதாப், சதீஷ், இயக்குநர்கள் மகேந்திரன் மற்றும் அகத்தியன், மைம் கோபி ஆகியோரும் இந்தப் படத்தில் நடிக்கின்றனர். ரிச்சர்ட் எம் நாதன் ஒளிப்பதிவு செய்ய, சாம் சி.எஸ். இசையமைக்கிறார்.
 
இந்தப் படத்தில், வரலட்சுமி சரத்குமார் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். அவருடைய போர்ஷன், நேற்றுடன் முடிவடைந்துள்ளது. இதனைக் கொண்டாடும் வகையில், ஷூட்டிங் ஸ்பாட்டில் கேக் வெட்டி மகிழ்ந்துள்ளனர் படக்குழுவினர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்