தளபதி 61' பட டைட்டில்: படக்குழுவினர்களிடம் இருந்து கசிந்த தகவல்

Webdunia
செவ்வாய், 20 ஜூன் 2017 (23:54 IST)
இளையதளபதி விஜய் நடித்து வரும் 'தளபதி 61' படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட்லுக் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்தின் டைட்டில் படக்குழுவினர்களிடம் இருந்து கசிந்துள்ளதாக டுவிட்டரில் செய்தி ஒன்று மிக வேகமாக பரவி வருகிறது.



 


இந்த கசிந்த தகவலில் இருந்து ஒன்று உறுதியாக தெரிய வந்துள்ளது என்னவெனில் இந்த படத்திற்கு 'மூன்று முகம்' டைட்டில் இல்லை என்பது தான். மேலும் 'மூன்று முகம்' மட்டுமின்றி வேறு எந்த பழைய படத்தின் டைட்டிலும் கிடையாது என்றும் ஃபிரஷ்ஷான டைட்டில் என்றும் உறுதி செய்யப்பட்டுள்ளது

இந்த படத்தின் போஸ்டரை டிசைன் செய்தவர்கள் இந்த படத்தின் டைட்டிலை நம்மிடையே மறைமுகமாக கூறியிருந்தாலும் சஸ்பென்ஸ்-ஐ உடைத்துவிட வேண்டாம் என்று கேட்டுக்கொண்டதற்கு இணங்க டைட்டிலை இங்கு பதிவு செய்யவில்லை. எனவே விஜய் ரசிகர்களே புத்தம் புதிய பிரஷ்ஷான டைட்டிலுக்கு நாளை மாலை வரை காத்திருங்கள்
அடுத்த கட்டுரையில்