விஜய் 61 தலைப்புடன் கூடிய பர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி அறிவிப்பு

Webdunia
செவ்வாய், 7 மார்ச் 2017 (16:45 IST)
அட்லி இயக்கத்தில் விஜய் தற்போது தனது 61-வது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன் ஆகியோர் நடித்து வருகின்றனர்.
 
 
மேலும், சத்யராஜ், எஸ்.ஜே.சூர்யா, வடிவேலு, சத்யன் உள்ளிட்டோரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இப்படத்தை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தனது 100-வது படமாக தயாரிக்கிறது. தலைப்பு வைக்கப்படாமலேயே படமாக்கப்பட்டு வரும் இப்படத்தின் தலைப்புடன் கூடிய பர்ஸ்ட் லுக் போஸ்டரை வருகிற தமிழ் புத்தாண்டு ஏப்ரல் 14-ந் தேதி வெளியிடப்போவதாக அறிவித்துள்ளனர். 
 
ஏற்கெனவே, விஜய்-அட்லி கூட்டணியில் வெளிவந்த ‘தெறி’ படம் ஏப்ரல் 14-ந் தேதி வெளியாகி, பெரிய வெற்றியை பெற்றது. எனவே, அந்த தேதியில் வெளியிட்டால் செண்டிமெண்டாக படம் ரசிகர்களிடையே நல்லதொரு வரவேற்பை பெறும் என்ற எதிர்பார்ப்பில் படக்குழுவினர் இருக்கின்றனர்.
அடுத்த கட்டுரையில்