செல்வராகவனுடன் இணைந்த விக்னேஷ்சிவன்

Webdunia
திங்கள், 22 அக்டோபர் 2018 (06:50 IST)
பிரபல இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் 'என்.ஜி.கே' திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருவது தெரிந்ததே

இந்த நிலையில் இந்த படத்தில் இயக்குனர் விக்னேஷ்சிவன் இணைந்துள்ளார். 'என்.ஜி.கே' படத்தில் இடம்பெறும் முக்கிய பாடல் ஒன்றை விக்னேஷ் சிவன், யுவன்ஷங்கரின் இசையில் எழுதியுள்ளார்.

இந்த பாடல் குறித்து விக்னேஷ் சிவன் தனது டுவிட்டரில் கூறியபோது, 'இயக்குனர் செல்வராகவனுடன் பணிபுரியவேண்டும் என்ற கனவு நனவாகிவிட்டதாகவும், யுவன் இசையில் பாட்டெழுதவும், சூர்யாவுடன் மீண்டும் இணைந்ததிலும் பெருமை என்றும் கூறியுள்ளார்.

மேலும் இந்த படத்தின் அப்டேட் எப்போது வரும் என சூர்யாவின் ரசிகர்கள் கேட்டுக்கொண்டிருந்த நிலையில் இந்த பாடல் விரைவில் ரசிகர்களுக்கு சிங்கிள் பாடலாக வெளிவரும் என்றும் விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார்.

சூர்யா, ரகுல்ப்ரித்திசிங், சாய்பல்லவி உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவும், ப்ரவீண் படத்தொகுப்பு பணியும் செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்