யாரு நம்பறதுன்னே தெரியில...ஜெயசூர்யா மீது மேட்ச் பிக்ஸிங் குற்றச்சாட்டு...
புதன், 17 அக்டோபர் 2018 (16:02 IST)
இலங்கை வீரர் ஜெய சூர்யா மீது மேட்ச் பிக்ஸிங் தொடர்பாக விசாரணை நடத்த ஐசிசி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகின்றன.
இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் சனத் ஹெயசூர்யா (49) கடந்த 2013 முதல் 2015 உலக கோப்பை தொடர்மற்றும் 2016 முத2017 ஆகிய ஆண்டுகளில் இலங்கை கிரிக்கெட் தேர்வுக்குழுவுன் தலைவராக இருந்தார்.
இவர் பொறுப்பில் இருந்த போது முறைகேடுகள் நடைபெற்றதாக குற்றச்சாட்டுகல் எழுந்ததை தொடர்ந்து பொறுப்பில் ஒருந்து விலகினார்.
இதனால் இவர் பதவியில் இருந்த காலத்தில் நடைபெற்ற விஷயங்கள் குறித்து விசாரணை நடத்த போவதாக ஐ.சி.சி.முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது.
இவ்வளவு பிரச்சனைகள் எழுந்தும்,ஜெயசூர்யா மீது குற்றம் சுமத்தப்பட்ட பின்பு கூட அவர் ஒத்துழைப்பு தராதது ஐசிசி அதிகாரிகளை எரிச்சல் ஏற்படுத்தியிருப்பதாக செய்திகள் வெளியாகின்றன.