விக்கி சொல்லுறத பார்த்தா நயனுக்கு இப்போதைக்கு நோ போல...!

Webdunia
செவ்வாய், 19 நவம்பர் 2019 (18:20 IST)
தமிழ் சினிமாவில் தற்போதைய ஹாட் காதல் ஜோடி நயன்தாரா - விக்னேஷ் சிவன் தான். இவர்கள் இருவரும் காதலிப்பது மட்டுமல்லால் சேர்ந்து அடிக்கும் லூட்டிகளை அவ்வப்போது சோசியல் மீடியாக்களில் பதிவேற்றம் செய்துவிடுவார்கள். 
இவர்கள் இருவரும் சேர்ந்து செய்யும் அளப்பறைகளை பார்க்கும் சமூக வலைதளவாசிகள் சிங்கிள் பசங்க சாபம் உங்களை சும்மா விடாது என கடுப்பாகின்றனர். அந்த அளவிற்கு லூட்டியடிக்கும் இந்த ஜோடி புறாக்கள் திருமணத்தை பற்றி மூச்சு விடாமல் கமுக்கமாக இருக்கிறார்கள். ஆனால் ஊர்சுற்றும் நெருக்கமான புகைப்படங்கள் மட்டும் அவ்வப்போது வெளியாகி பலரையும் புகைய வைத்துவிடுகிறது. 
 
மேலும் இவர்கள் இருவரும் ஒரே வீட்டில் லிவிங் டுகெதர் முறையில் வசிப்பதாகவும் செய்தி வெளியாகி கோலிவுட்டில் கிசு கிசுக்கப்பட்டது. அடிக்கடி டேட்டிங் சென்று வருகின்றனர் அந்தவகையில் நேற்று நியூயார்க் நகரத்தில் நயன்தாரா தனது 35 வது பிறந்தநாளை காதலருடன் கொண்டாடினர். இந்நிலையில் நயனுக்கு பிறந்த நாள் வாஸ்த்து கூறிய விக்கி " அவர் வாழ்க்கையிலும், வேலையிலும் மேலும், மேலும் சாதிக்க வேண்டும் என்று குறிப்பிட்டு தெரிவித்துள்ளார். 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Happy birthday to the love of my life

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அடுத்த கட்டுரையில்